சென்னையில் கொரொனாவில் இருந்து மீண்ட 94 வயது மூதாட்டி மற்றும் அவரது மகள்..!
சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த 94 வயது மூதாட்டி தொற்றில் இருந்து மீண்டுள்ளார். அவரது 70 வயது மகளும் கொரொனாவில் இருந்து விடுபட்டுள்ளார். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 94 வயதான கௌரிக்கும், 70 வயதான அவரது மகள் ஜெயலட்சுமிக்கும் கொரொனா தொற்று ஏற்பட்டது.
வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டனர். இந்நிலையில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி மற்றும் அவரது மகள் குணமடைந்து தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.






