--- --:--:-- --

பொம்மையில் அமர்ந்து கொண்டு கடலில் தத்தளித்த 5 வயது சிறுமி..!

10

கிரீஸில் பொம்மையில் அமர்ந்து கொண்டு கடலில் தத்தளித்த 5 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார். ஆண்டியோ ரியோ நகரை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்களது ஐந்து வயது மகளுடன் அந்த பகுதியில் உள்ள கடலுக்கு சென்றனர்.

 

அங்கு யூனிகான் குதிரை பொம்மை உருவம் பொறித்த பலூனில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பெரிய அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்டு கதறி அழுத சிறுமியின் பெற்றோர் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இதையடுத்து கடலுக்குள் தேடுதல் வேட்டை நடத்திய போது சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் குதிரை பொம்மையை கெட்டியாகப் பிடித்தபடி சிறுமி கடலில் தத்தளித்து தெரியவந்தது.

 

இதனைக் கண்டு ஆச்சரியப்பட்ட கடலோர காவல் படையினர் விரைவாக செயல்பட்டு சிறுமியை பத்திரமாக மீட்டனர். பின்னர் சிறுமி அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Leave a Reply

Right Menu Icon