--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5967 பேருக்கு தொற்று பாதிப்பு…! உயிரிழந்தோர் 107 பேர்!!

asd

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,95 | பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பு மீண்டும் நூறைக் கடந்து 107 ஆக பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் கடந்த ஒரு மாதமாகவே ஏற்றம் இறக்கமின்றி ஒரே மாதிரியாக தினசரி பாதிப்பு 6 ஆயிரத்திற்குள்ளும், உயிரிழப்பு 100 என்ற அளவிலும் பதிவாகி வருகிறது.

 

இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 5951 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்  தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக உயிரிழப்பு நூறுக்கு கீழாக இருந்த நிலையில் இன்று மீண்டும் நூறைத் தாண்டி 107 என பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 6,721ஆக உயர்ந்து உள்ளது.

 

அதிக பாதிப்பு

மேலும் சென்னையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்தே பதிவாகி வருகிறது. நேற்று 1,277 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய பாதிப்பு 1270 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 1, 27,847 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் 370, கோவையில் 320 பேருக்கும், , திருவள்ளுரில் 305, செங்கல்பட்டில் 321, சேலம் 297 தேனி 226, காஞ்சிபுரம் 214, நெல்லை 204 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon