மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது..!
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் அருகே 5 அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளில் மேலும் ஏராளமானோர் சிக்கி இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
ராய்கட் மாவட்டம் கஜன் பூரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவு 7 மணியளவில் இடிந்து விழுந்தது. இதையடுத்து காவல்துறையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தொடங்கினார்.
இறந்த ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில் 7 பேர் இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
குடியிருப்பு பணிகளில் இருந்தவர்களில் 51 பேரை காணவில்லை என்பதால் அவர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த குடியிருப்பில் 40 வீடுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.






