--- --:--:-- --

பெண்ணின் சடலம் மாற்றி எரிக்கப்பட்ட சம்பவம்..! தாயை முத்தமிட ஆசையாக உள்ளது என வேதனையுடன் கூறும் மகள்..!

10

புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் பெண்ணின் சடலம் மாற்றி எடுத்து செல்லப்பட்டது தொடர்பாக அவரது மகள் உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. வில்லியனூர் மணவளியை சேர்ந்த யோகநாதன் என்பவரின் மனைவி குணவேணி மூச்சு திணறல் காரணமாக கடந்த 17ஆம் தேதி உயிரிழந்தார்.

 

அவரது உடல் கதிர்கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது கொரொனாவில் உயிரிழந்த ஆனந்த தாய் உடலுக்கு பதிலாக குணவேணியின் உடலை எடுத்துச் சென்று எரித்து விட்டனர்.

 

இது தொடர்பாக குணவேணியின் கணவர் யோகநாதன் தனது இரண்டு மகள்களுடன் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அரசு கொடுக்கும் அஸ்தியை தனது தாய் உடையது என்று எப்படி நம்புவது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

தாயின் உடல் மாறியது தொடர்பாக அதிகாரிகள் அலட்சியமாக பதில் செல்வதாக அவரது மகள் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon