இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 55 ஊடுருவல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்..!
பஞ்சாப் எல்லை வழியே இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 55 ஊடுருவல் காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப்பில் டான்டாரனில் உள்ள சர்வதேச எல்லை அருகே இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் இன்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் பகுதியிலிருந்து சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை கண்டுபிடித்து அவர்களை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் எச்சரித்த போது அதை கண்டுகொள்ளாமல் ஊடுருவல் காரர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் அங்கு நடைபெறவிருந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.







