கைலாசா நாட்டுக்கான புதிய நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ள நித்யானந்தா..!
தனது கைலாச நாட்டிற்கான புதிய நாணயங்கள் என்று கூறி சில தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை சர்ச்சை சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். ஆள்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாக கூறி வருகிறார்.
கைலாஷாவுக்கான ரிசர்வ் வங்கி, கரன்சிகள் என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்ட அவர் விநாயகர் சதுர்த்தி அன்று முறையாக அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருந்தார்.
அதன்படி சமூக வலைத்தளத்தில் புதிய தங்க நாணயங்களை நித்தியானந்தா அறிமுகப்படுத்தியுள்ளார். கால் காசு முதல் 10 காசு வரை ஐந்து வகையான தங்க நாணயங்களை வெளியிட்டவர் காசுகளைக் கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விரைவில் கைலாசாவுக்கான பாஸ்போர்ட் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.







