--- --:--:-- --

புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறை செயலர் ராஜீவ் குமார் நியமனம்..!

8

புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறை செயலர் ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் ஆணையராக பதவி வகித்து வரும் அசோக் லெவஷா வரும் 31ஆம் தேதி ராஜினாமா செய்யவிருப்பதால் அந்த பொறுப்பிற்கு ராஜிவ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் உடன் கூடிய அறிவிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.ஐ‌ஏ‌எஸ் அதிகாரியான ராஜிவ்குமார் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து நிதித்துறை செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

 

சிறு, குறு நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் கடனுதவி வழங்கும் திட்டம் போன்றவற்றை மத்திய அரசுக்கு வடிவமைத்து கொடுத்ததில் ராஜிவ்குமாரின் பங்கு முக்கியமானது.

Leave a Reply

Right Menu Icon