--- --:--:-- --

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய உயர் நீதிமன்ற கிளை மறுப்பு!!

sdrs

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு விதித்த தடை சரியானதே என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய முடியாது எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் நாளை மறுதினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் புதிதாக செய்யப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதும், பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.

 

ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ராமசாமி என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதி சத்ய நாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு சரியானதே என்றும், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி நீதிபதிகள் வழக்கை செய்தனர்.

 

தடையை மீறி விநாயகர் சிலையை வைப்பவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஒரு கருத்தை கூறியிருந்தது. இந்நிலையில் அரசின் உத்தரவை மதித்து விநாயகர் சதுர்த்தி தினத்தில் அவரவர் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடுமாறு தமிழக அரசுத் தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon