மேட்டுப்பாளையம் அடுத்த அருகே தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து விபச்சாரம்.இருவர் கைது !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் உள்ள சரண்யா ரெசிடன்சி என்ற தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக கோவை எஸ்.பி அருளரசுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து எஸ்.பி உத்தரவின்படி மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையில் போலீசார் தங்கும் விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது,அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது உறுதியானது.மேலும், அங்கு இருந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணை மீட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தனியார் விடுதியையை மாத வாடகைக்கு குத்தகைக்கு எடுத்து விபச்சார தொழில் செய்து வந்த குத்தகைதாரர்களான வேலூரை சேர்ந்த மகேந்திரன், கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து தீவீர விசாரணை செய்தனர்.

மேலும்,விடுதி அறைகளை சோதனை செய்த பொழுது ஒரு அறையில் மட்டும் சுவற்றில் அமைக்கப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை சந்தேகத்தின் அடிப்படையில் தள்ளிப் பார்த்த பொழுது அது திறந்து கொண்டது. அதன் பின்புறம் யாரும் அறியாத வகையில் ஒரு ரகசிய அறை அமைக்கப்பட்டிருப்பதும், காவல் துறை சோதனையின் பொழுது மறைந்து கொள்வதற்காக அந்த அறையை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து விடுதி குத்தகையாளர்களான மகேந்திரன் மற்றும் கணேசன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையிலடைத்தனர்.இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





