--- --:--:-- --

தமிழகத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு : இன்று 5986 பேருக்கு தொற்று.. உயிரிழந்தோர் 116 பேர்!!

fd

மிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று 5986 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3,61,435 ஆக உயர்நதுள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5,742ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 3,01,913 ஆக உயர்ந்துள்ளது.

 

இன்றும் 116 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 6,239 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் மட்டும் 1,21,450 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது வரை, தமிழகம் முழுவதும் 38,51,411பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது.

 

இன்று மட்டும், 73,162 பேருக்கு பரிசோதனை செய்து உள்ளனர். தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,175 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டில் 462, கோவையில் 397, திருவள்ளுரில் 393 என மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையல் பாதிப்பு பதிவாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon