--- --:--:-- --

கோவையில் முகம் பார்க்கும் கண்ணாடி பின் இருந்த சீக்ரட் ரூமில் பாலியல் தொழில்..!

11

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்னே ரகசிய அறை அமைக்கப்பட்டு பாலியல் தொழில் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் சாலையில் ரயில்வே கேட் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் முன்புறம் பூட்டிக்கிடந்த விடுதியை திறந்து ஆய்வு நடத்தினர்.

 

அப்போது ஒரு அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடி சற்றுப் பெரிய அளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததை கண்டனர். இதனால் கண்ணாடியை சற்று அழுத்திய போது அதன் கதவு போல் திறந்து கொள்ள உள்ளே ஒரு ரகசிய அறை இருப்பதை கண்டு பிடித்தனர்.

 

போலீசார் வழக்கமாக ஆய்வு நடத்த செல்லும் போது விடுதிக்குள் இருக்கும் பெண்களை அந்த ரகசிய அறைகளில் மறைத்து விடுவது பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து விடுதியின் காப்பாளர் விடுதி ஊழியர் மற்றும் ஒரு பெண் என மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon