--- --:--:-- --

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

9

மிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

 

மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது வானிலை மையத்தின் கணிப்பு. வங்கக் கடலின் மத்திய மேற்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகள் அரபிக்கடலில் தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் மணி 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் குளச்சல், தனுஷ்கோடி இடையே கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon