--- --:--:-- --

அடேங்கப்பா… 5 மாதம் “குடிமகன்கள்” கொலைப் பட்டினி போலும்…! சென்னையில் கடை திறந்த முதல் நாளில் ரூ. 33.5 கோடிக்கு “டாஸ்மாக்” சேல்ஸ்!!

unnamed (1) - Copy

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் ரூ.33.5 கோடிக்கு சரக்கு சேல்ஸ் ஆகி குடிமகன்கள் கொண்டாடித் தீர்த்துள்ளனர்.

 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடுவிழா கண்டன. ஒன்றரை மாதத்திற்கு பின் ஊரடங்கில் சிறிது தளர்வு அறிவிக்கப்பட்டவுடன், இதில் முதல் தளர்வாக டாஸ்மாக் கடைகள் திறப்பு என்ற அறிவிப்பு தான் வெளியானது.கடந்த மே மாதம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடை திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

 

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கடை திறந்த நாளில் கூட்டம் அலைமோத நீண்ட தடுப்பு அமைத்து போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சென்னை குடிப் பிரியர்கள் பரிதவிப்பில் கிடந்தனர், சிலர் அண்டை மாவட்டங்களுக்கு நைசாக படையெடுத்தனர். சென்னையில் கள்ள மார்க்கெட்டில் சரக்கு விலை பல மடங்கு விற்பனையான நிலையில் பலர் எப்போது டாஸ்மாக் திறப்பு அறிவிப்பு வருமோ? என காத்துக் கிடந்தனர்.

 

5 மாத இடைவெளிக்குப் பின்

இந்நிலையில் கிட்டத்தட்ட 5 மாத இடைவெளிக்குப் பின் சென்னையில் நேற்று டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு விழாக்கண்டன. இதனால் உற்சாகமடைந்த குடிமகன்கள் காலை 10 மணிக்கு முன்னரே டாஸ்மாக் கடைகள் முன் வரிசை கட்டி நின்றனர்.சென்னை மாநகரில் உள்ள 720 டாஸ்மாக் கடைகளிலும் காலை 10 மணி முதல் கடை அடைக்கப்பட்ட மாலை 7 மணி வரை ஏகத்துக்கும் விற்பனை ஜோராக நடந்தேறியது.

 

ஒரு கடைக்கு 500 பேருக்கு மட்டும் தான் டோக்கன் வழங்க வேண்டும். முக கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் என்ற கட்டுப்பாடு, அறிவுறுத்தல்களையெல்லாம் யாரும் பின்பற்றியதாகவும் தெரியவில்லை. கூட்டம் அலைமோதியது.

 

விற்பனை எவ்வளவு தெரியுமா?

கடைசியில் சென்னையில் நேற்று ஒரு நாள் விற்பனை எவ்வளவு தெரியுமா? 33.5 கோடி ரூபாய் என அடேங்கப்பா ரகமாக எகிறியுள்ளது. தமிழகம் முழுவதுமே டாஸ்மாக் சராசரி விற்பனை ரூ.100 கோடி எனில், சென்னையில் 33.5 கோடி என்ற அளவுக்கு ஒரே நாளில் விற்பனை எகிறியதை பார்க்கும் போது, குடிப் பிரியர்கள் 5 மாதமாக கடும் பஞ்சத்தில் இருந்திருப்பார்கள் என்றே தோணுகிறது.

Leave a Reply

Right Menu Icon