--- --:--:-- --

ஆட்டோவிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு பிறந்த ஆண் குழந்தை..!

4

பொள்ளாச்சி அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஆட்டோவிலேயே குழந்தை பெற்றெடுத்தார். கொள்ளுபாளையம் பகுதியை சேர்ந்த சினேகா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானதால் மருத்துவமனை வாயில் முன்பு ஆட்டோவிலேயே பிரசவம் பார்க்கப் பட்டது. இதனை தொடர்ந்து அந்த பெண் ஆட்டோவிலேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

 

பின்னர் தாயும் சேயும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Right Menu Icon