ஃபேஸ்புக்கில் மூலம் பழகி பெண்களிடம் பல லட்சம் மோசடி செய்த நபர்..!
முகநூல் மூலம் பழகியும், வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பல பெண்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த சென்னையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் அழகு நிலையம் வைத்திருக்கும் ராக்கி என்பவருடன் சூலை பகுதியை சேர்ந்த திலீப் என்பவர் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார்.
ராக்கியின் குடும்பத்தாருடன் அறிமுகமாகியுள்ளார். ஐபோன் வியாபாரம் செய்வதாக ஆசை காட்டி ராக்கியின் பங்கு என இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு திலீப் தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து ராக்கியின் கணவர் அளித்த புகாரின் பேரில் வேப்பேரி காவல் நிலையத்தினர் திலீப்பை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் இரண்டே கால் லட்சம் ரூபாயை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். திலீப் மீது ஏற்கனவே வேப்பேரி, ஜாம்பஜார், அமைந்தகரை காவல் நிலையங்களில் மோசடிப் புகார்கள் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முகநூலில் பெண்களுடன் பழகி அவர்களது குடும்பத்தாரோடும் அறிமுகமாகி மோசடி செய்வது வேலை வாங்கி தருவதாக மோசடி செய்வது போன்ற புகார்கள் பதிவாகி இருந்தன.







