--- --:--:-- --

ஒரே நாளில் 1.2 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது..!

1

விண்ணப்பித்த அனைவருக்குமே இ பாஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு இ பாஸ் அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

பொதுமக்கள் இ பாஸ் பெறுவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமில்லாமல் இ பாஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து நேற்று முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் உடனுக்குடன் இ பாஸ் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

 

இந்நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டதாகவும் இதற்கு முன்னதாக நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 15 ஆயிரம் பேருக்கு இ பாஸ் வழங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சென்னையிலிருந்து மட்டுமே நேற்று மாலை நேர நிலவரப்படி 19 ஆயிரம் வாகனங்கள் சென்றுள்ளதாகவும் இதற்கு முன்பு பத்தாயிரம் வாகனங்கள் மட்டுமே இரு மார்க்கத்தில் சென்றதாகவும் கூறுகின்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon