--- --:--:-- --

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரொனாவில் இருந்து மீண்டு வர திரையுலகினர் பிரார்த்தனை..!

6

பின்னணி இசை பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய சினிமா பிரபலங்கள் வேண்டி வருகின்றனர். கொரொனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்பி பாலசுப்ரமணியன் குணமடைந்து வரக் காத்திருக்கிறோம் என நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

எனது குரலாக நீங்களும் உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். எஸ் பி பாலசுப்ரமணியம் குரல் தொட வேண்டும் என்று மீண்டும் வாருங்கள் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.

 

பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடவுளுக்கு இணையானவர் என்றும் அவர் விரைவில் குணமடைவார் என்று நடிகை குஷ்பு வீடியோ வெளியிட்டுள்ளார். மூச்சுவிடாமல் பாட்டு பாடும் திறன் கொண்ட எஸ்பிபி மீண்டு வர பிரார்த்தனை செய்வோம் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

 

எஸ் பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என்று கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன், பாடகி நித்யஸ்ரீ, பாடகர் வேல்முருகன் இசையமைப்பாளர் ஆகியோரும் பிரார்த்தனை செய்வதாக கூறி யுள்ளனர்.

 

இசையை விரும்பும் கோடானகோடி ரசிகர்களை எஸ்பிபி நலம் பெற பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon