--- --:--:-- --

பல்கலைக்கழக இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம்

2

ல்கலைக்கழகங்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை யுஜிசி அமைப்பு அறிவித்தபடி நடத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இறுதியான செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று யுஜிசி அமைப்பு ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அதே கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.

 

நாடு தழுவிய பொது முடக்க தளர்வுகள் மூன்று கட்டங்களாக வெளியிட பட்டிருப்பதால் தாராளமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படலாம் என்று உள்துறை அமைச்சகம் தனது பிரமாண பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

முன்னதாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வு வரும் செப்டம்பருக்குள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவிப்புக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. கொரோனா பரவல் சூழலில் இந்த தேர்வுகள் பாதிப்புகளை அதிகரிக்கும் என மாணவர்கள் தரப்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

 

இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் கருத்தை கேட்டிருந்தது. கல்லூரி இறுதியாண்டு கடைசி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக சாடியுள்ளார்.

 

இறுதி ஆண்டின் கடைசி பருவத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் ஏற்கனவே முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்தந்த மாநிலங்களில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மாநில அரசுகளின் இறுதி தேர்வுகள் ரத்து செய்து கொள்ளும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon