இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு நடத்தப்பட்ட கொரொனா பரிசோதனை..!
இந்திய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி வீரர்கள் நாளை முதல் சென்னையில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இதில் பங்கேற்க உள்ளதை முன்னிட்டு தோனிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.
இதையடுத்து தோனி, ரெய்னா, ஹர்பஜன் உள்ளிட்ட வீரர்கள் நாளை முதல் 6 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். பயிற்சி முடித்தவுடன் மீண்டும் அவரை பரிசோதனை செய்த பிறகு ஆகஸ்ட் 22ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க உள்ளனர்.







