சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றிய 27 நபர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கம்..!
சுதந்திர தின விழாவையொட்டி 27 நபர்களுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பில் முன்கள பணியாளர்களாக சிறப்பாக பணியாற்றிய மருத்துவ குழுவினர் 9 பேருக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேந்திரன், விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பதக்கம் பெற உள்ளனர். இதேபோல் காவல்துறையில் மணப்பாறை காவல் நிலைய காவலர் சையித் அபுதாஹிர், அனந்தபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம ஜோதி, சென்னை பெருநகர மகளிர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு துறையில் மூன்று நபர்களுக்கும், நகராட்சி நிர்வாக துறையில் ஆறு பேருக்கும் பதக்கம் வழங்கப்பட உள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் தலா மூருக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கம் மற்றும் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.







