நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கேரள முதலமைச்சர்..!
கேரள மாநிலம் ராஜ மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் பினராயி விஜயன் பார்வையிட்டார். அந்த பகுதியில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது. ஆற்றின் கரையோரங்களில் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை கேரள ஆளுநர் ஆசிப் முகமது பார்வையிட்டார்.







