முதன் முறையாக கொரொனா தடுப்பூசியை கண்டுபிடித்தது ரஷ்யா..! அதிபரின் மகளுக்கு போடப்பட்ட தடுப்பூசி..!
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரொனாவுக்கான தடுப்பு மருந்தை பல்வேறு நிலைகளில் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இருப்பினும் ரஷ்யா முதல் கட்ட மனித சோதனையை தொடங்கி இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது.
மூன்றாம் கட்டமாக சோதனை ஓட்டம் துவங்கப்பட வேண்டியுள்ளது. இருப்பினும் ரஷ்யா உலகின் முதல் கொரொனா வைரசுக்கான தடுப்பூசியை பதிவு செய்துள்ளது. இதற்கு அந்த நாட்டினுடைய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துள்ளது.
மூன்றாவது கட்ட பரிசோதனைகளை மேற்கொள்லாமலேயே இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற விமர்சனமும் ஒரு பக்கம் இருக்கும் சூழ்நிலையில் இது பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வதற்காக ரஷ்ய அதிபர் புதினின் இரண்டு மகள்களில் ஒருவருக்கு இந்த கொரொனா தடுப்பூசி உடலில் செலுத்தி அது வெற்றிகரமாகவும் முடிவு எழுந்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் மகளுக்கு 38 டிகிரி வெப்பம் இருந்தது. முதல் வேக்ஸின் கொடுத்தவுடன் அடுத்த நாளே அது 37 டிகிரி ஆக குறைந்தது. இரண்டாவது வேக்சின் கொடுத்த பின் அது மேலும் குறைந்ததாக ரஷ்ய நாட்டு அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.
பொது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் இது பாதுகாப்பானது என்று நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஒரு சோதனை புதினின் மகள் மேல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







