பன்னிரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் காவியில் இருந்து வெள்ளைக்கு மாறிய பாரதியார் தலைப்பாகை..!
பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இருந்த பாரதியாரின் தலைப்பாகை இந்த ஆண்டு வெள்ளை நிறத்தில் மாற்றி அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
பிளஸ் டூ மாணவர்களின் தமிழ் புத்தகத்தின் அட்டைப் படத்தில் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருந்தது. அதனால் முக்கிய தலைவர்களின் அடையாளம் மாற்றப்பட்டிருப்பதாகவும் காவி நிறம் பூசப்பட்டு இருப்பதாகவும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் பாரதியாரின் தலைப்பாகை வெள்ளை நிறத்தில் மாற்றி அச்சிடப்பட்டுள்ளது.







