--- --:--:-- --

திருச்சியில் ஆபாச வீடியோ பார்த்த கால்நடை மருத்துவர் கைது..!

11

திருச்சியில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்ததாக கால்நடை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது மற்றும் ஆபாச வீடியோக்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

 

இது தொடர்பான புகாரில் எடமலைப்பட்டிபுதூர் ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்து வரும் 52 வயது அருள் என்ற கால்நடை மருத்துவர் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் நடத்திய ஆய்வு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

விசாரணைக்குப்பின் இந்திய தண்டனை சட்டம் 67a, 66b மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கால்நடை மருத்துவர் அருளை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon