--- --:--:-- --

நடிகர் விஜய் மீது அவதூறு பரப்பும் மீரா மிதுன்..! விஜய் ரசிகர்களால் அடுத்தடுத்து அளிக்கப்படும் புகார்..!

1

டிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து அவதூறு பரப்பிய நடிகை மீரா மிதுன் மீது பல மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் விஜய் ரசிகர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

 

அதில் நடிகை மீரா மிதுன் கீழ்த்தனமான விளம்பரத்திற்காக சமூக ஊடகங்களில் விஜய் குறித்து அவதூறு பரப்புவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட மீராவிடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நடிகை மீரா முதலில் திரிஷா தனது மாடலிங் புகைப்படங்களை காப்பி அடிப்பதாக கூறி வந்தார். இதனால் திரிஷா ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து நடிகர் சூர்யாவையும் தரக்குறைவாக பேசினார்.

 

இந்நிலையில் விஜய் மற்றும் அவரது மனைவி மீது வன்முறை பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்ட வீடியோவை நீக்கிவிட்டு மீராமிதுன் சமூக வலைதள கணக்கையும் முடக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் விஜய் ரசிகர்கள் மீரா மிதுன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் ரசிகர்கள் மீராமிதுன் மீது புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon