--- --:--:-- --

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் 5 வது நாளாக வெள்ளப்பெருக்கு.அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு !!!

0.3

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணை கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக விளங்கி வருகிறது.இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

 

அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி.நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்ததை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளின் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது.இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 

மேலும்,பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

 

இந்த நிலையில் 5 வது நாளாக இன்றும் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவான 14,500 கன அடி நீர் அப்படியே 4 மதகுகளின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.இதன் காரணமாக பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

மேலும்,5 வது நாளாக பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளான தேக்கம்பட்டி,நெல்லித்துறை,ஓடந்துறை,சிறுமுகை,வச்சினம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

 

மேலும்,மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும்,அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து தரவும் காவல் துறை,வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

 

ஆய்வின் போது எம்.எல்.ஏ ஓ.கே.சின்னராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன்,வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்,முன்னாள் எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர்,நகர செயலாளர் வான்மதி சேட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon