இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்த ராஜபக்ஷ நாளைபதவியேற்பு..!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்க உள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 196 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை ராஜபக்ஷவின் பொதுஜன முன்னணி கைப்பற்றியது.
எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்றுக் கொள்கிறார். தற்போது சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் அவர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.







