--- --:--:-- --

கோழிக் கோட்டில் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளான விமானம்..!

1

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த விமானம் புறப்பட்டு இருந்தது. அந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.

 

கோழிக்கோடு விமான நிலையத்தில் இரவு 7.30 மணி அளவில் அந்த விமானம் தரையிறங்கியபோது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் ஓடுபாதையில் இருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது.

 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் விமானி. துணை விமானி உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

 

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

 

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். விமான விபத்து குறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயனிடம் கேட்டு அறிந்த பிரதமர் மோடி தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

Leave a Reply

Right Menu Icon