மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு..! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு..!
மூணாறுல் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் தொடர்ந்து அதிக கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது .அதைத் தொடர்ந்து 80 பேர் மண்ணில் புதையுண்டதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. இன்று காலை முதலே மூணாரில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக சாலை மார்க்கமாக செல்லும் வழி தடங்கள் அனைத்துமே துண்டிக்கப்பட்ட நிலையில் விமானத்தின் மூலமாக இதற்கான மீட்பு பணியில் இறங்க முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது . ஆனால் விமானம் செல்லும் நேரத்தில் அங்குவந்த மழை காரணமாக விமானத்தை இயக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மேலும் கோட்டயத்தில் இருந்து 52 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்காகவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒன்பது பேர்களின் உடல் மீட்கப்பட்டு அவர்களின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் 9 பேரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







