இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராஜபக்சவுடன் பேசிய பிரதமர் மோடி.. !
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையிலேயே அந்நாட்டு பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். வெற்றிகரமாக நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி அடைந்ததற்கான பாராட்டுகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, ராஜபக்சே கட்சிமுன்னிலையில் இருந்து வரும் நிலையில் அதற்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினார். புத்தர்களின் புனித நகரமாக கருதப்படும் குஷி நகரில் விமான நிலையம் அமைக்கப்படுவதாகவும் விரைவில் இலங்கையிலிருந்து வரும் யாத்திரிகர்களை அந்த விமான நிலையம் வரவேற்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.







