--- --:--:-- --

இந்தி நடிகர் திடீர் மரணம்..! வீட்டிலிருந்து சடலமாக கண்டெடுப்பு..!

10

ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் சமீர் ஷர்மா இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு வயது 44. லெப்ட் ரைட் லெப்ட், ககாணி கர்கர்கி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும், பல திரைப்படங்களிலும் நடித்துள்ள சமீர் சர்மா மும்பையின் மலாட் பகுதியில் உள்ள அகிம்சா என்ற இடத்தில் குடியிருந்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று அவர் வீட்டிற்குள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சமீரின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் உடற்கூறு ஆய்வு வந்த பின்னர் முடிவுகள் தெரியவரும் என காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Right Menu Icon