பழனியில் வீட்டின் முன்பு கிடந்த மண்டையோடு..! அதிர்ச்சியில் மக்கள்..!
பழனியில் வீடுகள் முன்பு மண்டையோடுகள் வைக்கப்பட்டிருந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பழனி தேவாங்கர் தெரு பகுதியில் 11-வது வார்டில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் மணி, பாக்கியம் ஆகியோரது வீட்டு வாசலின் முன்பு வைத்துவிட்டு தப்பியுள்ளனர்.
அதுமட்டுமின்றி அங்குள்ள ஒரு ரேஷன் கடை வாசல் முன்பு இறந்த மனித எலும்பு மற்றும் கைகளை வைத்து மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து பழனி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை பார்த்து அங்குள்ள மக்கள் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.







