ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடியாததால் இளம் தம்பதி தற்கொலை..!
கொடைக்கானலில் மின் பொறியாளரான இளம் தம்பதி ஆஸ்திரேலியாவுக்கு பணிக்கு செல்ல போதிய பணமில்லை என்று கூறி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
தெலுங்கானாவை சேர்ந்த கோபி கிருஷ்ணன் – நந்தினி தம்பதி ஒரு வருடத்திற்கும் மேலாக அட்டுவம்பட்டி யில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர். மின்பொருள் திட்டப்பணி செய்து வந்த இருவரும் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது தம்பதி இருவரும் சடலமாக கிடந்தனர்.
களைக்கொல்லி பூச்சி மருந்து குடித்து இருவரும் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா செல்ல பணம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்வதாக தெலுங்கில் எழுதிய கடிதத்தையும் இருவரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







