--- --:--:-- --

சீனாவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கொடுத்த பதிலடி..!

5

இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எந்த உரிமையும் கிடையாது என்று சீனாவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு ஓர் ஆண்டாக இருக்கும் நிலையில் பாஜக வினர் அதைக் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் பெய்ஜிங்கில் செய்தியாளரிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த முடிவு தன்னிச்சையானது என்றும் செல்லுபடியாகாது என்றும் கூறினார். நீண்ட காலமாக உள்ள காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

 

இந்தியாவும், பாகிஸ்தானும் அண்டை நாடு என்பதால் இந்த விவகாரத்தில் இருந்து விலகி செல்ல முடியாது என்று கூறிய அவர் இந்த பிரச்சினையை அமைதியான முறையில் ஆலோசனைகளின் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

அவரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்க சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று காட்டமாக கூறியுள்ளது.

 

ஏற்கனவே லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கை சொந்தம் கொண்டாடி வரும் சீனா அங்கு படைகளை குவித்து வந்த நிலையில் தற்போது காஷ்மீர் விவகாரத்தில் அவர் தலை இடுவதே இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை அதிகப்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon