ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு..! வியப்புடன் பார்க்கும் மக்கள்..!
திருவண்ணாமலை அருகே ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் கன்றுகளை ஈன்றுள்ள பசுவை சுற்றுவட்டார மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மளப்பாம்பாடை கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவரது விவசாய வளர்த்து வரும் பசுமாடு முதல் பிரசவத்தில் ஒரு பெண் கன்று ஈன்றது.
இரண்டாவது பிரசவத்தில் தற்போது இரண்டு கன்றுகளை ஈன்று உள்ளது. மாடுகள் இயல்பாக ஒரு கன்றை மட்டுமே பிரசவிக்கும் தன்மையுடையன என்ற நிலையில் அபூர்வமாய் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவது உண்டு.







