--- --:--:-- --

ஜம்மு-காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநர் ஜி.சி.முர்மு ராஜினாமா..!

1

ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ஜி.சி முர்மு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்க்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 60 வயதான முர்மு பதவி விலகியதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் அவருக்கு மத்திய அரசு சார்பில் வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

முர்முவிற்கு பதிலாக யார் அந்த பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட பின்னர் அதன் முதல் துணை நிலை ஆளுநர் ஆக முர்மு கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

 

ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அவர் நிதி அமைச்சகத்தில் ஒரு செயலாளராக பதவி வகித்து வந்தார். ஐஏஎஸ் அதிகாரியான முர்மு பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அவரது முதன்மை செயலாளராக பதவி வகித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon