--- --:--:-- --

கோவை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர்கள் இருவர் போக்சோவில் கைது !!!

12341

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். வீரபாண்டி பிரபு நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 22).இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டில் இருந்தார். அப்போது, அவருக்கு சந்தோஷ் போன் செய்து தனது வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி சிறுமியும் எருக்கம்பெனி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது,அப்பகுதியில் டூவீலருடன் நின்றிருந்த சந்தோஷ் அப்பகுதியில் உள்ள குப்பை வீட்டிற்கு சென்றுள்ளான்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

வீட்டில் ஏற்கனவே சந்தோஷ் நண்பர் சதீஷ் (வயது 20) என்பவர் இருந்துள்ளார். அங்கு அவர்கள் 3 பேரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென சந்தோசும்,சதீசும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

 

பின்னர், வலுக்கட்டாயமாக இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி சத்தம் போட்டுள்ளார்.

சிறுமியின் அலறல் சப்தம் கேட்ட அந்த வழியாக சென்ற சிலர் சத்தம் கேட்டு துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் தகவல் கொடுத்தனர்.

 

சம்பவம் குறித்து அறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில் தன்னை இரு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ்,சதீஷ என்ற இரு இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பெயிண்டர் கைது செய்யப்பட்ட நிலையில் 13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscription

Leave a Reply

Right Menu Icon