--- --:--:-- --

சிவகங்கை பகுதியை ஆண்ட மன்னர்களுக்கு சிலை வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு…!

17

சிவகங்கை சீமையை ஆண்ட மன்னர்களுக்கு சிவகங்கையில் இதுவரை சிலைகள் ஏதும் இல்லை‌. அவர்களின் அடையாளத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் விதமாக பிரம்மாண்ட சிலை வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயக்காந்தன் அவர்களிடம் தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் நிறுவன தலைவர் திருமாறன் ஜி அவர்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து வருவதாகவும்,இதுவரை சிவகங்கையில் மருதுபாண்டியர்களுக்கு திருவுருவ சிலை இல்லாத நிலையில், சிவகங்கை பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூரு இல்லாத வகையில் சிலை வைக்கவேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon