இராமநாதபுரத்தில் பா ஜ க அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு முன்பு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சதீஸ் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு கல்வியாளர் தலைமையில் குழுவை உருவாக்க வேண்டும் இந்த புதிய கல்வி கொள்கையால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

பிளஸ் 2 முடித்தவர்கள், பின்னர் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது, இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்க கூடியதாகும். மேலும் கல்வி முற்றிலும் வணிக மயமாகி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உயர் கல்வி செல்வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே என ஆகிவிடக்கூடாது இந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிப்பதை பா ஜ க முயற்சி செய்து வருகிறது.ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். அதனை எட்டாம் வகுப்புவரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.






