மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி..! உதவிய காவல் உதவி ஆய்வாளர் ..!
கொட்டும் மழையில் சாலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணியை மீட்ட காவல்துறையினர் அவரது கணவரிடம் ஒப்படைத்தனர். கடந்த 31ஆம் தேதி இரவு திருவரம்பூர் அருகே சாலையில் விழுந்து கிடந்த கர்ப்பிணியை திருவரம்பூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த பெண், மருத்துவரை கண்டதும் கூச்சலிட்ட நிலையில் அவருக்கு மருத்துவம் பார்க்க யாரும் முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கர்ப்பிணி கொட்டும் மழையில் சாலையோரத்தில் அமர்ந்துள்ளார். அந்த வழியாக ரோந்து சென்ற துவாக்குடி ஆய்வாளர் காந்திமதி அந்த பெண்ணிடம் ஆறுதலாக பேசி அவரது விவரங்களை கேட்டறிந்து அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
வீட்டில் கணவர் விட்டுச் சென்ற நிலையில் அந்த பெண் வீட்டிலிருந்து வெளியே வந்து விட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து கர்ப்பிணியை கணவருடன் தஞ்சாவூருக்கு காவலர்கள் அனுப்பி வைத்தனர்.






