--- --:--:-- --

வெளிவந்த சுஷாந்த் சிங் வங்கி ஆவணம்..! மாட்டிக்கொண்ட ரியா..!

7

நடிகர் சுஷாந்த் சிங் உடன் ஓராண்டு சேர்ந்து வாழ்வதாக அவரது காதலி ரியா கூறியுள்ளார்.அவருக்கு எதிராக பாட்னா காவல் நிலையத்தில் பதிவான வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில் ரியா குறிப்பிட்டுள்ள சில விவரங்ககள் ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ளது.

 

அவருடன் ஓராண்டு ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக ஜூன் 8 ஆம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக அவர் கூறியுள்ளார். ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. தற்போது சுஷாந்த் வங்கி ஆவணங்களும் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளது.

 

அது சுஷாந்த்தின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை ரியா குடும்பத்தினர் எவ்வாறு செலவிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ரியாவின் சகோதரர் விமான டிக்கெட் வாங்கியது நட்சத்திர ஹோட்டலில் தங்கியது போன்றவைக்கு சுஷாந்த் பணத்தை செலவிட்டது தெரியவந்தது. இதனால் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமனன்றம் நேற்று நிராகரித்து விட்டது.

 

தற்போது சுஷாந்த்தின் மரணம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை தொடர்பாக விசாரித்து வரும் மும்பை போலீசார் திரையுலக பிரபலங்களையும் வாக்குமூலம் பெறுவதை நிறுத்தி வைத்துள்ளனர்.

 

உச்சநீதிமன்றத்தில் வழக்கின் முடிவு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மும்பை போலீஸ் முடிவு செய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon