--- --:--:-- --

பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலிக்க கூடாது என உத்தரவு..!

6

முழு கட்டணத்தையும் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரொனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளிலும் திறக்கப்படாததால் நடப்பு கல்வி ஆண்டிற்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

 

எனவே அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் சென்ற ஆண்டு வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில் 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதில் 40 சதவீதம் தொகையை ஆகஸ்ட் 31-க்குள் வசூலித்துக் கொள்ளும் மீதமுள்ள 35 சதவீத தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குள் வசூலித்துக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பள்ளிகள் முழு கட்டணத்தையும் மாணவர்களிடமிருந்து வசூலிப்பதாக தமிழக அரசு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முறையிட்டுள்ளார்.

 

இதைக் கேட்ட நீதிபதி எந்தெந்த பள்ளிகள் முழு கட்டணம் வசூலிக்கிறது என்று ஆகஸ்ட் 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon