--- --:--:-- --

பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியீட்டில் கோவை மாவட்டம் முதலிடம்..!

1

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மற்றும் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.இந்த இந்த இணையதளம் மூலம் தங்களுடைய பதிவு எண் பிறந்த தேதி மாதம் வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

 

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு 96.04 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் 94.38 சதவீத பேரும், மாணவிகள் 97.49 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஒரு சதவீதம் பேர் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

 

பிளஸ் 1 தேர்வில் 98.10 விழுக்காடு தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில் 97.90 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.2716 பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon