--- --:--:-- --

இன்று மாலை இந்தியாவில் ரபேல் போர் விமானங்கள் தரையிறங்குகிறது…! நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்ட காட்சிகள் !!

c480623f-ba4b-4ccf-a385-c2d0556b75a8

பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட 5 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் இன்று மாலை அரியானாவில் உள்ள அம்பாலா விமானப் படை தளத்தில் தரை இறங்க உள்ளன. நீண்ட தூர பயணம் மேற்கொண்டுள்ள இந்த போர் விமானங்களில் எரிபொருள் குறைந்ததால், நடுவானில் பறக்கும் போதே பிரான்ஸ் விமானப் படை விமானங்கள் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்டது.

 

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், இந்திய விமானப் படைக்கு அதிநவீன போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்த ஒப்பந்தத்தின் முதல் படியாக கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி, முதலாவது ரபேல் போர் விமானத்தை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்ஸ் அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

 

eBooks

 

கடந்த ஏப்ரல் மாதம் மேலும் ஒரு ரபேல் போர் விமானத்தை இந்திய விமானப்படை வசம் பிரான்ஸ் ஒப்படைத்தது. தொடர்ந்து இந்திய விமானப்படையிடம் மேலும் 4 போர் விமானங்களை கூடிய விரைவில் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.கடந்த
மே மாதம் ஒப்படைக்கப்படவிருந்த ரஃபேல் கொரோனா காரணமாக தாமதமானது.

 

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன. உடன் உதவிக்காக பிரான்ஸ் விமானப் படை விமானங்களும் பறந்து வருகின்றன. மொத்த தூரம் 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு இந்த விமானங்கள் பறந்து இந்தியா வர வேண்டி உள்ளது. தூரம் அதிகம் என்பதாலும், ரபேல் விமானத்தின் எரிபொருள் செலவும் அதிகம் என்பதாலும் எரிபொருள் தேவைப்படும் போது நடு வானிலேயே நிரப்பும் வசதியும் உள்ளது. இதற்காக எரிபொருள் நிரப்பும் பிரான்ஸ் விமானப் படை விமானங்களும் தயாராக உடன் வருகின்றன.

 

நேற்று இந்த பயணத்தின்போது ரபேல் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.இந்தத் தகவலை இந்திய விமானப்படை தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

 

பின்னர் நேற்று இரவில் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள விமான தளத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அங்கு இரவு ஓய்வுக்குப் பின் இன்று காலை 11 மணிக்கு பயணத்தை மீண்டும் தொடங்கும் ரபேல் விமானங்கள் இன்று மாலை 3 மணிக்கு இந்தியா வந்து சேர்கின்றன.

 

இந்த விமானங்கள் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரபேல் விமானங்கள் தரை இறங்குவதையொட்டி அம்பாலாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் வேறு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon