கொரோனா தடுப்பு மருந்தை 30,000 பேருக்கு கொடுத்து பரிசோதனை..!
கொரோனா தடுப்பு மருந்தை 30,000 பேருக்கு கொடுத்து சோதிக்கும் நடைமுறை அமெரிக்காவில் தொடர்ந்துள்ளது. அமெரிக்க சுகாதார துறையும், மாடர்ணா என்ற தனியார் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் சோதனை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற சோதனைகளில் வெற்றி கிடைத்த நிலையில் தற்போது 30 ஆயிரம் பேரிடம் இறுதி கட்ட சோதனை தொடங்கியுள்ளது. உலகெங்கும் சுமார் 150 கொரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளில் இருந்தாலும் அவற்றில் ஒன்றில் 30 ஆயிரம் பேருடன் கொடுத்து பரிசோதிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.







