--- --:--:-- --

டி‌ஆர்‌பிக்காக தற்கொலைக்கு தூண்டி சித்ரவதை செய்வதை நிறுத்த வேண்டும் எனக்கூறிய ஓவியா..!

2

வியா தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அதற்குப் பின் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் நடந்ததை பிக் பாஸ் சீசன் இல்லாத ஒரு போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். பிக்பாஸில் அவருடைய ஆட்டிடுயூட் மக்களை கவர்ந்தது. இந்த நிலையில் அவருடைய வெளிப்படையான தன்மை அவருக்கு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆரவ் ஒரு போட்டியாளராக இருந்த நிலையில் ஓவியா ஆரவ்வை காதலிப்பதாகவும் சில பேச்சுகள் எழுந்தன.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிகாக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு போட்டியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்பதை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்கள் என ஓவியா ட்விட்டரில் பதிவிட்டார்.

 

பெரும் வியப்பை ஏற்படுத்திய இந்த பதிவுக்கு ஒருவர் ஆம் தடை செய்ய வேண்டும் என பதில் அளிக்க அதற்கு ஓவியாவோ டிஆர்பி காக போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வரை அவர்கள் சித்திரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என விரும்புவதாக பதிலளித்தார். சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon