இன்று கார்கில் போர் வெற்றி தினம்: இந்திய வீரர்களின் தீரத்தை உலகே மெச்சியது..! மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி புகழாரம்!!
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினமான இன்றைய தினத்தில், அதனை தமது மன் கி பாத் உரையில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இந்திய வீரர்களின் வீர, தீரத்தை உலகே வியந்து மெச்சியது என புகழாரம் சூட்டினார்.
1999-ல் கார்கில் பகுதியில் ஊடுருவி வாலாட்டிய பாகிஸ்தான் ராணுவத்தையும், பயங்கரவாதிகளையும் இந்திய வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு தாக்குதல் நடத்தினர். இ ரு வாரங்களாக நடைபெற்ற இந்தப் போரில் பாகிஸ்தானை ராணுவத்தை சின்னாபின்னமாக்கி துரத்தி அடித்து பின் வாங்கக் செய்த ஜூலை 26-ந் தேதியை கார்கில் போர் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறோம்.
இன்று வானொலியில் மான் கி பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கார்கில் போர் வெற்றியை குறிப்பிட்டு பேசினார். அப்போது, பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்பியது. ஆனால் அந்த நாட்டின் இயற்கை குணத்தால் இந்தியாவுக்குள் ஊடுருவி வம்பிழுத்தது.
இதற்கு கார்கிலில் நம் வீரர்கள் தீரத்துடன், வீரத்துடன் எதிர்கொண்டு வெற்றி தேடித் தந்த தினம் இன்று . இந்திய வீரர்களின் வீரத்தை உலகமே வியந்து மெச்சியது, இந்த நாளில் , நாட்டு எல்லைக்காக போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் என பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.







