கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த மகளை தந்தையே கொலை செய்த கொடூரம்..!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இளம்பெண் சந்தேக மரணம் வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடையபிள்ளை தெருவை சேர்ந்த பாலாஜி என்பவர் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர் மகள் செந்தாரகை என்பவர் இளைஞர் ஒருவரை காதலித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அவருடன் வாழ மறுத்த செந்தாரகை பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி கழிவறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு செந்தாரகை உயிரிழந்ததாகக் கூறி தந்தை போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த போலீசார் அவரை கைது செய்தனர். கணவருடன் வாழ மறுத்ததால் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.







