நள்ளிரவில் நிர்வாணமாக சுற்றும் மர்மநபர்கள்..!
கோயம்புத்தூரில் குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் அரை நிர்வாணத்துடன் முகமூடி அணிந்து நடமாடும் மர்ம நபர்களை சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
பீலமேடை அடுத்த பாலகுரு கார்டன் பகுதியில் நள்ளிரவில் கால் சட்டை மட்டும் அணிந்து மேல் சட்டை அணியாமல் முகத்தை மறைத்து துணி கட்டிய 3 மர்ம நபர்கள் தெருவில் சுற்றுவது, வீடுகளை எட்டிப் பார்ப்பது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாகவும் ஒரு வீட்டின் கதவை உடைக்க முயற்சித்ததாகவும் குடியிருப்புவாசிகள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சிசிடிவியில் பதிவாகிய இருந்த இந்த காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.







